சமையல் எரிவாயு விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் தருவியா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட நீடாமங்கலம் கடைத்தெரு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹50 உயர்த்தப்பட்டதை கண்டித்தும் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு என்.ராதா மாவட்ட குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி. முருகேசன், ஏ.ராஜேந்திரன், எஸ்.ராஜா, ஜே.ராபர்ட்பிரைஸ் கிளை செயலாளர்கள்.எஸ் செல்வராஜ், கே.தங்கராசு, எ.முருகேசன், எ.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாஜக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது.