மாயனூரில் காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை ஆய்வு செய்த அரசு துறை அதிகாரிகள்.

மாயனூரில் காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை ஆய்வு செய்த அரசு துறை அதிகாரிகள்.;

Update: 2025-04-10 12:38 GMT
மாயனூரில் காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை ஆய்வு செய்த அரசு துறை அதிகாரிகள். கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் ஒரு டிஎம்சி வரை மட்டுமே நீர் சேமிக்க இயலும். அதே சமயத்தில் வெள்ள காலத்தில் உபரியாக கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து காவிரி- வைகை- குண்டாறு வெள்ளநீர் இணைப்பு கால்வாய் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்ற 2021 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 2025 ஜூன் மாதம் முடிக்க திட்டமிட்டு முதல் கட்டமாக 118.45 கிலோமீட்டர் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்ட பணியில் 85- சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிகளை இன்று தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை ஆய்வு செய்த பிறகு அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் தயாளகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News