நத்தம்: பைக் மோதி தொழிலாளி படுகாயம்

நத்தம்: பைக் மோதி தொழிலாளி படுகாயம்;

Update: 2025-04-10 13:00 GMT
நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிசுரேஷ் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் நத்தத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மதுரை சாலையில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே சின்னபள்ளபட்டியை சேர்ந்த ராம்குமார் (27) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது.இதில் தடுமாறி கீழே விழுந்த பாண்டிசுரேசிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Similar News