பாலத்துறை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து.

பாலத்துறை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து.;

Update: 2025-04-10 13:23 GMT
பாலத்துறை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் வயது 50. இவர் ஏப்ரல் 8-ம் தேதி மதியம் 12 மணி அளவில்,கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- பாலத்துறை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பாலத்துறை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது,ஈரோடு மாவட்டம்,கொடுமுடி, பழைய இபி அலுவலகம் சாலையைச் சேர்ந்த அசோக்குமார் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற பெரியண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பெரியண்ணனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியண்ணனின் சகோதரர் கருப்பசாமி வயது 48 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர். .

Similar News