
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அருள்மிகு அழகேஸ்வரி ஜெயந்திஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்திகா என்ற பெண் தவறவிட்ட ஐம்பொன் தங்கச் சங்கிலியை தாழக்குடியை சேர்ந்த இளைஞர்கள் கண்டெடுத்து அதனை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பனிடம் கூறி வழங்கினார்கள். இளைஞர்களின் செயலை பாராட்டிய அவர் அதனை ஆரல்வாய்மொழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் சகாயராஜ் ஆகியவரிடம் கொடுத்து அதனை தொலைத்தவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் தங்க நகை தொலைத்த கார்த்திகாவை கண்டுபிடித்து அவரிடம் நகையை இன்று ஒப்படைத்தனர். மேலும் போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.