
கோடை விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களையொட்டி மக்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை வருகிறது. மேலும் பிளஸ் 2, மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்துவிட்டது. இதனால் கோடை விடுமுறையையொட்டி அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். அதேபோல் அடுத்த வாரம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு என்பது முடிந்து விடும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். இதனால் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இருமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது அதன்படி சென்னை- கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089) வருகிற ஏப்ரம் மாதம் 10 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 7.00 மணியளவில் புறப்படும். கன்னியாகுமரி - சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06090) வருகிற ஏப்ரம் மாதம் 11 மற்றும் 18, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் நாளை கன்னியாகுமரியில் இருந்து மாலை 8.00 மணியளவில் புறப்படும். இந்த ரயில்களில் 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 (மாற்றுத்திறனாளிகளுக்கானது) இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.