நடைபாதை ஆக்கிரமிப்பு

நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்;

Update: 2025-04-10 15:51 GMT
பல லட்சம் செலவில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதை உதகை ஏடிசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என விழிப்புணர்வு இல்லாமல் பழைய பொருட்களை வியாபாரம் செய்யும் ஒரு சில நபர்கள் தங்களின் கடை போன்று இந்த நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து உபயோகப்படுத்தி வருவதாகவும் பொது மக்கள் இந்த நடைபாதையை இன்று காலை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியுள்ளனர் ஏற்கனவே இது தொடர்பாக பல தரப்பினரும் இந்த இடத்தை சுத்தமாக சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று பதிவிட்டு வரும் நிலையில் இந்த கடைக்காரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது பொதுமக்கள் மற்றும் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

Similar News