தனியார் நிலத்தில் மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

காங்கேயம் அருகே தனியார் நிலத்தில் மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு வட்டாட்சியகளிடம் புகார் மனு;

Update: 2025-04-11 00:31 GMT
காங்கேயம் ஆரத்தொழுவு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நெடுஞ்சாலை துறைக்கு தேவைக்காக மண் அள்ளிக்கொள்ள நெடுஞ்சாலை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அனுமதி கோரி கடந்த 21-ந் தேதி விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில் இதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என வருவாய் அலுவலர் கடந்த மாதம் 24-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து சேடங்காளிபாளையம், அவினாசிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகனிடம் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனவும், எனவே உத்தரவு வழங்க கூடாது எனவும் தங்களின் எதிர் மனுவை அளித்துள்ளனர்.

Similar News