கிருஷ்ணகிரி தனயார் பள்ளியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா.
கிருஷ்ணகிரி தனயார் பள்ளியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா.;
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது. வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமைவகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி நிறுவனர் தம்பி துரை எம்.பி. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.