ராணிப்பேட்டையில் பஞ்சு சேகரிப்பு ஆலையில் தீ விபத்து

பஞ்சு சேகரிப்பு ஆலையில் தீ விபத்து;

Update: 2025-04-11 04:18 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கொளத்தேரி ரயில்வே கேட் அருகில் தனியார் பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இந்த பஞ்சு ஆலையில் நேற்று இரவு இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் மள மளவென தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வாலாஜா தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

Similar News