நெல்லையில் வரலாற்று சிறப்புமிக்க ஜங்ஷன் மேம்பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இது குறித்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஜங்ஷன் கிளை சார்பாக கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி பாளையங்கோட்டை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து தற்பொழுது பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியினர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.