சொகுசு பங்களாவின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த யானை
பரபரப்பு ஏற்ப்பட்டது..........;
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தனியார் சொகுசு பங்களாவின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.......... நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வருவது வழக்கம் இந்நிலையில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில பர்லியார் அருகே முகாமிட்டிருந்தது இதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர் பர்லியார் பகுதியில் உள்ள தனியார் சொகுசு பங்களாவின் கேட்டை உடைத்து யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.