ஜெயமங்கலம் காவல் நிலையம் முன் 'செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கப் பெறின்' என்ற திருக்குறள் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.ஐ., முருக பெருமாள் கூறுகையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோர் உள்ளே நுழையும் போதே இத் திருக்குறளை படித்து விட்டு மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என கருதி திருக்குறள் பேனர் வைத்துள்ளதாக தெரிவித்தார்.