கோலாகலமாக சப்பர திருவிழா.
மதுரை உசிலம்பட்டி அருகே சப்பர திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சப்பர தேர் திருவிழா நேற்று (ஏப்.10) நடைபெற்றது. சுமார் 31 அடி உயரமுள்ள தேர் முத்தாலம்மன் கோவிலிலிருந்து கிராம தெருக்களில் ஊர்வலமாக கைத்தாங்கலாக தூக்கி சென்று கருப்பசாமி கோவிலில் இறக்கி வைக்கப்பட்டது. இந்த தேர் திருவிழாவின் போது பக்தர்கள் முளைப்பாரி, ஆயிரம் கண்பானை, பைரவர் சிலை எடுத்தும், காளி வேடம், பூதங்கள் வேடம், ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.