தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்து சென்றவர்களை தெருநாய்கள் விரட்டி கடித்தன. இதில் ஈஸ்வரன், விஜயதர்ஷினி, வரதராஜ், ஸ்ரீதர், ஐயப்பன், கீர்த்திக்குமார், செல்லப்பாண்டி ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த நகராட்சி ஊழியர் கோபிநாத் நேற்று (ஏப்.10) தெரு நாயை பிடிக்க முற்பட்ட பொழுது அவரையும் தெரு நாய் ஒன்று கடித்தது. நாயை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.