இரு மனனைவிகளை சமாளிக்க முடியாமல் கணவர் தற்கொலை.

மதுரை திருமங்கலம் அருகே இரண்டு மனைவிகளுக்குள் தகராறு வந்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-04-11 09:18 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நிர்ராலா 31. கரடிக்கல்லில் கட்டட தொழிலாளியாக இருந்தார். இவரது மனைவி பூஜானி நிர்ராலா என்பவர் சேலத்தில் கட்டட தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் சுரேஷிற்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பார்வதி சூரி என்ற பெண்ணிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த முதல் மனைவி தகராறில் ஈடுபட்டதால் ஏப்.5ல் முதல் மனைவியை சமரசம் செய்ய சேலத்திற்கு சுரேஷ் சென்றுள்ளார் . இதையறிந்து 2வது மனைவியும் சேலத்திற்கு செல்ல, அங்கு இரு பெண்களும் தகராறில் ஈடுபட்டனர். இவர்களின் தகராறை சமரசம் செய்ய முடியாமல் விரக்தியில் வீடு திரும்பிய சுரேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News