தேனி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (67). இவர் மார்ச் 17 அன்று மகனை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். மீண்டும் அவர் நேற்று (ஏப்.10) வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 கிராம் தங்க நகைகள் மற்றும் 90,000 பணம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. திருட்டு குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.