போடி நகர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஏப்.10) தென்றல் நகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர் 22.500 கிலோ கிராம் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.