ஜல்லிக்கட்டுக்கு நிதியுதவி அளித்த திமுக.
மதுரை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திமுகவினர் நிதியுதவி அளித்தனர்.;
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லமரம், ந.கோவிலூர், ந.முத்துலிங்காபுரம், ந.மீனாட்சிபுரம் மற்றும் கொட்டாணிபட்டி ஆகிய கிராம ஊர்கள் சார்பாக நல்லமரம் கிராமத்தில் வருகின்ற 14-04-2025 திங்கட்கிழமை அன்று நடைபெறும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவிற்காக முதற்கட்டமாக ரூபாய் 2.0 லட்சம் நன்கொடையாக இன்று (ஏப்.11) தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி போலீசார் வழங்கினார். இந்நிகழ்வில் தே.கல்லுப்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.