உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி, கணேசன் ஆகியோர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது சகாபூதீன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாபூதினை நேற்று (ஏப்.10) கைது செய்தனர்.