இரயில் நிலையம் முற்றுகையிட முயன்றவர்கள் கைது.
மதுரை இரயில் நிலையத்தை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.;
மதுரையில் இன்று (ஏப்.11) மாலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்த பெரியார் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஊர்வலமாக சுமார் 30 பேர் இரயில் நிலையம் நோக்கி சென்றனர். இரயில் நிலையம் அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஊர்வலத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்தும்,திரும்ப பெற கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.