சாமிதோப்பு முத்துக்குடை ஊர்வலம்

அய்யாவழி பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2025-04-11 12:20 GMT
சாமிதோப்பு முத்துக்குடை ஊர்வலம்
  • whatsapp icon
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி தலைமை பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் செல்லும் முத்துக்குடை ஊர்வலம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தவருடம் முத்துக்குடை ஊர்வலம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு இன்று காலை நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், வாகன பவனியும் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு தலைமைப்பதி முன்பிருந்து முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது.ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர்,வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் போகும் பகுதிகளிலுள்ள அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெற்றது. நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்து முட்டப்பதி பாற்கடலில் பதமிட்டு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. ஊர்வலம் மீண்டும் மாலை 4- மணிக்கு முட்டப்பதியிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது.

Similar News