
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளில் 50 கிலோவிற்கு பதிலாக 46 கிலோ(4கிலோ அரிசி குறைவாக குடோன்களில் இருந்து வருகிறது - இதில் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் இந்த முறை கேடுகள் நடப்பதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் முற்றுகையிட்டனர். மேலும் எடை குறைவாக அரசி மூட்டைகள் வருவதால் பொது மக்களுக்கு ரேசன் அரிசி வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சிவகாமி உள்ளிட்ட பல அதிகாரிகள் உடந்தையாக இந்த முறைகேடுகள் நடந்து வருகிறது. இதே போல் ரேசன் கடைகளில் ப்ளுடூத் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்ய தகுதி இல்லாத நிறுவனத்திடம் கொடுத்து உள்ளார்கள் இதனால் ரேசன் கடைக்கு வரும் பொது மக்களின் பதிவு எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரேசன் கடைகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட குளறுபடிகள் தொடர்கிறதே தவிர தீர்வு ஏற்படவில்லை என தெரிவித்து தங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.