தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இன்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகல் முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் சூழல் நிலவியது இந்நிலையில் மாலையில் லேசாக சாரல் மழை பெய்யத் துவங்கியது இந்த சாரல் மழை நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் கனமழையாக தற்போது பெய்து வருகிறது இதனால் பகல் முழுவதும் சுட்டெரித்து வந்த வெப்பம் தணிந்து தற்போது குளிர் காற்று வீசுகிறது ஆண்டிபட்டி நகர் மட்டுமல்லாது அனுப்பபட்டி , பாலக்கோம்பை , எந்தக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.