ஜே ஜே கார்டனில் கிட்னியில் ஏற்பட்ட கல் அடைப்பால் உடல்நலம் குன்றி வாலிபர் உயிரிழப்பு.
ஜே ஜே கார்டனில் கிட்னியில் ஏற்பட்ட கல் அடைப்பால் உடல்நலம் குன்றி வாலிபர் உயிரிழப்பு.;
ஜே ஜே கார்டனில் கிட்னியில் ஏற்பட்ட கல் அடைப்பால் உடல்நலம் குன்றி வாலிபர் உயிரிழப்பு. கரூர், வடக்கு காந்திகிராமம் அருகே உள்ள ஜே ஜே கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் ரமேஷ் வயது 36. இவருக்கு கிட்னியில் ஏற்பட்ட கல் அடைப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு உரிய குணம் ஏற்படவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், அவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ரமேஷின் மனைவி வாசுகி அதிர்ச்சி அடைந்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த ரமேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.