
கிள்ளியூர் தொகுதி, ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை (யு.கே.ஜி.) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெல்ஃபின் மேரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமரித்தோழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பத்மதேவன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுஜிமோள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தனியார் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் இத்தகைய பட்டமளிப்பு விழா, அரசுப் பள்ளிகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.