சித்திரம்கோடு :  காம்பவுண்ட் சுவர் உடைப்பு 

கன்னியாகுமரி;

Update: 2025-04-11 13:17 GMT
சித்திரம்கோடு :  காம்பவுண்ட் சுவர் உடைப்பு 
  • whatsapp icon
திருவட்டார் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெயக்குமார் (51). தொழிலதிபர் மற்றும்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சித்திரங்கோடு ஊற்றுப்பாறை பகுதியில் சொத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் மூன்று கடைகள்  கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளது.       இந்த இடம் மற்றும் கட்டிடங்களை ஆஸ்டின் ஜெயகுமாரிடம் இதே பகுதி சேர்ந்த ஒருவர் விலைக்கு கேட்டுள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.       இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் வந்து மூன்று பேர் கும்பல் வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்து, கேட்டையும் அடித்து உடைத்து உள்ளனர். அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ள அலமாரியை உடைத்து சொத்து ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.       இது குறித்து ஜெயக்குமார் அங்கு சென்றபோது அவரை கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆஸ்டின் ஜெயகுமார் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News