நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புத்தன் வீட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டீபன் (65). இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் ஸ்டீபன் ஹேமமாலினியை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை ஹேமமாலினியை பார்த்த ஸ்டீபன், அவரது பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இது சம்பந்தமாக ஹேமமாலினி நித்திரவிளை போலீசில் புகார் கொடுத்தார். நித்திரவிளை போலீசார் ஸ்டீபன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.