அமைச்சர் சாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்
காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த கிளை நூலக கட்டிடம் - காங்கேயத்தில் அமைச்சர் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார் ;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட சந்தை வளாகத்தில் புதிதாக ரூ.22 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் இன்று காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இவ்விழாவில் நகர,ஒன்றி திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். காங்கேயம் திருப்பூர் ரோடு நகராட்சிக்கு உட்பட்ட சந்தை வளாகத்தில் புதிதாக கிளை நூலகம் கட்டும் பணி ரூ. 22 லட்சத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட புதிய கட்டிடங்கள் இந்த காணொளி காட்சி மூலம் திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் புதிய கட்டிடத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. பின்னர் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நூலகம் திறப்பு விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார் முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மோகன செல்வம், காங்கேயம் நகராட்சி தலைவர் சூர்யா பிரகாஷ்,திமுக நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன்,ஒன்றிய செயலாளர்கள்,கே.கே.சிவானந்தம்,சி.கருணை பிரகாஷ்,காங்கேயம் நகராட்சி கவுன்சிலர்கள், காங்கேயம் வட்டாச்சியர் மோகனன், காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.