அரசு விடுமுறை தினத்தில் மது பாட்டில்கள் அமோக விற்பனை
காங்கேயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு விடுமுறை தினத்தில் மது பாட்டில்கள் அமோக விற்பனை;
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று இறைச்சி கடைகள் மற்றும் மதுக்கடைகள், தனியார் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றது. நத்தக்கடையூர் அருகே முள்ளிப்புரம் காங்கேயம் சந்தை, கரூர் ரோடு, நால் ரோடு, வெள்ளகோவில், ஊதியூர், வாய்க்கால்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஜிபே, பேடிஎம் ஸ்கேனர் மிஷின்கள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதில் 150 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் ரூ.250 வரையிலும் கூடுதல் விலைக்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டது. மற்றும் சட்ட விரோத மது விற்பனை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.