பதவி உயர்வு பெற்ற காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரையில் பதவி உயர்வு பெற்ற காவலர்களை காவல் ஆணையர் வாழ்த்துகளை கூறி அறிவுரை கூறினார்.;

Update: 2025-04-12 01:13 GMT
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து வரும் 130 முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்களை நேற்று (ஏப்.11) மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்‌,அவர்கள் நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி, வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு ) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம் ) ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News