குமரியில் கனிமவளக் கொள்ளை - புகார்

நாம் தமிழர் கட்சி;

Update: 2025-04-12 02:57 GMT
குமரியில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குமரி மாவட்டம் வழுக்கம்பாறை ஜங்ஷன் அருகில் தமிழ்நாட்டு கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில் தானியக்கிடங்கு அமைப்பதற்காக அரசு அதில் அமைந்துள்ள பாறைகளை அகற்ற தனியாருக்கு தன்னிச்சையாக ஒப்பந்தம் கொடுத்துள்ளது . எந்தவித ஓபன் டெண்டரும் கோராமல் அரசியல் பின்புலத்தோடு உள்ள ஒரு தனி நபர்கள் வழுக்கம்பாறையில் உள்ள விலைமதிக்கத்தக்க கனிமவளங்களை சூரையாடி வருகின்றனர். இவர்கள் மீ‌து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட தலைவர் தீபக் சாலமோன், தெற்கு தொகுதி தலைவர் சேதுபதி ஆகியோர் புகார் அளித்தார்.மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News