சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

ஏற்பு;

Update: 2025-04-12 03:15 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்., 14ம் தேதி, ஆண்டுதோறும் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.அதன்படி நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் நிகழ்ச்சியில், உறுதி மொழியை கலெக்டர் பிரசாந்த் தலைமையில் துறை அலுவலர்கள் ஏற்றனர்.இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, வேடியப்பன், ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News