திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் கல்லடி சிதம்பராபுரம் ஊரைச் சேர்ந்த தலித் பொதுமக்கள் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு களக்காடு அம்பேத்கர் சிலை முன்பு இறந்த நபர் ஒருவரின் பிணத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களிடம் காவல்துறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.