அரசு பஸ் மோதி முதியவர் பலி

வெள்ளகோவில் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி காவல்துறை விசாரணை;

Update: 2025-04-12 06:15 GMT
வெள்ளகோவில் காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் காங்கேயம் -வெள்ளகோவில் தேசிய நெடுஞ் சாலையில் இரட்டைக் கிணறு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டியிலி ருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அரு கில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர் வரும் வழியில் பொன்னுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் எஸ். ஞானப்பிரகாசம் விசாரணை செய்து வருகிறார்.

Similar News