மது போதை தகராறில் ஈடுபட்டவர் கைது
தாராபுரத்தில் மது போதை தகராறில் ஈடுபட்டவர் கைது;
தாராபுரம் அலங்கியம் ரவுண்டானா அருகே நத்தகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் மாசிலாமணி (வயது 27). இவரும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் காளிமுத்து (30) மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிபோதையில் இருந்த காளிமுத்து, மாசிலாமணியை தாக்கியது தெரியவந்தது. தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.