தடா கோவில் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

தடா கோவில் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;

Update: 2025-04-12 07:32 GMT
தடா கோவில் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புங்கம்பாடி மேல்பாகம், கணக்கு வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 69. இவர் ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 8 மணி அளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தடா கோவில், நாகம்பள்ளி பிரிவு அருகே சென்ற போது, எதிர் திசையில் கரூர் ஆண்டங்கோவில், கிழக்கு ராம கவுண்டன் புதூர், தில்லைநகர், நான்காவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், கனகராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கனகராஜை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கனகராஜ் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்

Similar News