மண்டி கடை அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

மண்டி கடை அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.;

Update: 2025-04-12 08:06 GMT
மண்டி கடை அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 30. இவர் ஏப்ரல் 11-ம்தேதி காலை 10:30 மணி அளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் திருக்காம்புலியூர் மண்டி கடை அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், எதிர்பாராத விதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் சாமிநாதன் வயது 35 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News