பெண்ணை தாக்கிய  வாலிபர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி;

Update: 2025-04-12 08:10 GMT
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி மனைவி மேரி வசந்தி (63). சம்பவ தினம் மேரி வசந்தியின் வீட்டில் காலிங் பெல்லை ஒருவர் அடித்தார். மேரி வசந்தி திறந்து பார்த்தபோது எதிரே நின்ற வாலிபர் என்னை தெரிகிறதா?  எனக் கேட்டு அந்தோனியார் தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என அறிமுகப்படுத்தினார்.       மேலும் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பெயரை கூறிய ரஞ்சித், நான்தான் அந்த பெண்ணின் காதலன் நீ அந்தப் பெண் தங்கி இருக்கும் வாடகை விட்டு உரிமையாளரிடம் அவர் குறித்து புரளி பேசி காலி செய்ய வைக்கிறாயா?  எனக் கேட்டு  தகராறு செய்தார்.       இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி வசந்தி இது குறித்து தனது செல்போன் மூலம் மகனுக்கு தகவல் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் திடீரென மேரி வசந்தியை தாக்கினார். இதில் காயமடைந்த மேரி வசந்தி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.       இது குறித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News