குருபரப்பள்ளி: ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று போ் கைது.
குருபரப்பள்ளி: ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று போ் கைது.;
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் போலீசார் வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பிக்அப் வேன்களை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் நான்கு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது. தெரியவந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் பெத்ததாளப்பள்ளியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்கிற மொசல் (34) மற்றும் 17, 18, வயதுக்கு உடைய இரண்டு சிறுவா்களும் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை அடுத்து, 3 பேரை கைது செய்த போலீசார் நான்கு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு பிக்-ஆப் வேன்களையும் பறிமுதல் செய்தனா்.