காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை கிடுகிடு உயர்வு

வரத்து அதிகரிப்பால் ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது பச்சை பட்டாணி கிலோ ரூ. 120 விற்பனை;

Update: 2025-04-12 11:02 GMT
ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டில் 700 -க்கும் மேற்பட்ட காய்கறிகள் கடைகள் செயல்படுகின்றன. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், கேரளா, ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் இன்று வ உ சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. வரத்து அதிகரிப்பு எதிரொலியாக கடந்த வாரத்தை விட இன்று சில காய்கறிகள் ரூ. 5 முதல் 10 வரை அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட கருப்பு அவரை இன்று ஒரு கிலோ ரூ.110 ஆக உயர்ந்து விற்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்ட பச்சை பட்டாணி இன்று ஒரு கிலோ 120 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டது. இதேபோல் இன்று வ உ சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- கொத்தவரங்காய் - 40, கத்திரிக்காய் - 30, வெண்டைக்காய் - 40, பாவக்காய் - 50, முள்ளங்கி - 30, சுரக்காய் - 10, கேரட் - 50, பீட்ரூட் - 60, பீன்ஸ் - 80, குடைமிளகா - 60, பச்சை மிளகாய் - 40, முட்டைக்கோஸ் - 25, பீர்க்கங்காய் - 50, கருப்பு அவரை - 110, பட்டவரை - 60, முருங்கைக்காய் - 30, இஞ்சி - 50, புடலங்காய் - 50, உருளைக்கிழங்கு - 40, சின்ன வெங்காயம் - 35, பெரிய வெங்காயம் - 35, தக்காளி - 10, 15, 20, சேனைக்கிழங்கு - 50, கோவைக்காய் - 40, பச்சை பட்டாணி - 120, காலிங்பிளவர் - 30,

Similar News