வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்து சுடுகாட்டில் உள்ள மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-04-12 11:09 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், உத்தண்டியூர், ராமாபுரத்தை இறந்தவர் ரவுத்தான் (67). இவரது மனைவி மரக்காள். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் சுரேஷுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு ஊரில் உள்ள உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து அவரது உறவினர்கள் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சுரேசை போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் பயந்து போன சுரேஷ் இதுகுறித்து தாய் மற்றும் அண்ணனிடம் கூறி வேதனை அடைந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டு அருகே உள்ள சுடுகாட்டில் இருந்த வேப்ப மரத்தில் சுரேஷ் திடீரென தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுரேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து சத்தியமங்கலம் போல போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News