வசந்த் அன் கோ வேலை வாய்ப்பு முகாம்

நாகர்கோவில்;

Update: 2025-04-12 11:55 GMT
வசந்த் அன் கோ சார்பில் இன்று குமரி மாவட்டத்தில் 7வது வேலை வாய்ப்பு முகாம் நாகர்கோவில் சுங்கான் கடை செயின்ட் சேவியர் கத்தோலிக்க கல்லூரி வைத்து நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமை விஜய்வசந்த் எம்பி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். முதல்வர் மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார், கல்லூரி தாளாளர் அருட்தந்தை காட்வின் செல்வ ஜெஸ்டஸ் வாழ்த்துரை வழங்கினார். வசந்த் குழும செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்து உரையாற்றினர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் 800 க்கு மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், கல்லூரி பிளேஸ்மென்ட் துறை தலைவர் அன்றோசேவியர், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் டைசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News