கடலூர்: தொழுதூரில் இன்று அதிகபட்ச மழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் தொழுதூரில் இன்று அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.;

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று (12.04.2025) சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 13 மில்லிமீட்டர், பெலாந்துறை 8.4 மில்லிமீட்டர், கீழ்செருவாய் 8 மில்லிமீட்டர், லால்பேட்டை 1.2 மில்லிமீட்டர், காட்டுமன்னார்கோவில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.