அகினேஸ்புரத்தில் நூலகம் மற்றும் பூங்கா அமைத்து தர இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அகினேஸ்புரத்தில் நூலகம் மற்றும் பூங்கா அமைத்து தர இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2025-04-12 15:27 GMT
அகினேஸ்புரத்தில் நூலகம் மற்றும் பூங்கா அமைத்து தர இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
  • whatsapp icon
அரியலூர் ஏப்.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகினேஸ்புரம் கிளை கூட்டம் நடைபெற்றது.கூட்டம் அந்தோணியார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆண்டிமடம் கவர்னர், பாலா, சகாயராஜ், தெய்வ சகாயம், சிவக்குமார், தாஸ், மைக்கேல் ராஜ் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய கிளை செயலாளராக தோழர் பாலா, துணை செயலாளராக தெய்வ சகாயம், பொருளாளராக அந்தோணி சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மெயின் ரோட்டில் இருந்து மேட்டு தெரு சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தி தெரு விளக்குகளை அமைத்து தர வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு மூன்று மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், அகினேஸ்புரம் நியாய விலை கடை அருகில் அரசு இடத்தில் நூலகம், மற்றும் பூங்காவும் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

Similar News