தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் அளவிற்கு எதுவும் நடைபெறவில்லை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி;
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவனாகரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய குற்றங்களோ சாதி கலவரங்களோ, மதக் கலவரங்களோ அல்லது தொடர் கொலை சம்பவங்களோ நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில குற்ற சம்பவங்கள் நடைபெறலாம். அதனை கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது சரியல்ல அந்த வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இருந்தாலும் குற்றச் செயல்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக உள்ளது என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான் இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள் பல காவலர்கள் கை கால்களை இழந்து உள்ளார்கள் அப்படிப்பட்ட சூழலில் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்வது வழக்கம் தான் அதே நேரம் என்கவுண்டர் குற்றச் செயல்களை குறைத்து விடாது. ஆனால் குற்றச்செயல்கள் செய்பவர்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தும் குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்லலாம் பெண்களை ஏமாற்றி நகைகளை திருடிச் செல்லலாம் என நினைத்து வருபவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது தமிழ்நாட்டில் காவலர்களிடம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வரவேண்டும் அந்த வகையில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் அளவிற்கு எதுவும் நடைபெறவில்லை அப்படி ஏதேனும் நடைபெற்றால் நாமும் அதற்கு குரல் கொடுப்போம் என தெரிவித்தார். இதில் பள்ளி தாளாளர் மனைவர் காமராஜ், ஆசிரியர்கள் பெற்றொர்கள் திரளாக கலந்த கொண்டனர்.