புதிய பாஜக தலைவருக்காக வெடி வெடித்து கொண்டாட்டம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை மயிலாடுதுறையில் கொண்டாடிய பாஜகவினர்.;
. பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு மயிலாடுதுறையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு தெரிவித்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.