
குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) காலை திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சபை ஊழியர் அன்பு ஏசையா தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு வீதிகளில் பவனியாக சென்றனர். இதனை தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும், வருகிற ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.