வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்
மதுரை மேலூர் அருகே இளம் பெண் மாயம் என தாயார் புகார் அளித்துள்ளார்.;

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியை சேர்ந்த ரவியின் மகள் அபிநயா(19)என்பவர் மேலூரில் உள்ள கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் நண்பர்களின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடி கிடைக்கவில்லை என்பதால் நேற்று ( ஏப்.12) பெண்ணின் தாயார் மாரிசாந்தி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.