
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7:00 மணி க்கு தொடங்கி 8:30 மணி வரை கன மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, பாவளம், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.